மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 06:41 pm
madhya-pradesh-congress-mlas-meet-governor-for-making-governance

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க  ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்திற்கான தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 5 மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்றாகும். அதிக தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் இறுதியாக இன்றுதான் வெளியாகின. 

அதன்படி, காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளிலும், பா.ஜ.க. 109 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அங்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 116. மேலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 1 தொகுதியிலும் , சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

முன்னதாகவே சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸூக்கு ஆதரவு அளிப்பதாக, அக்கட்சியின் தலைவரான மாயாவதி இன்று அறிவித்தார். 

இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு 117 இடங்கள் கிடைத்துள்ள நிலையில் , அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இணைந்து இன்று மத்திய பிரதேச மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோரியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close