விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டம்!

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 05:58 pm
govt-likely-to-announce-rs-4-lakh-crore-farm-loan-waivers-to-win-back-rural-voters

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீபத்தில் நடந்து முடிந்த  5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை. மத்திய பிரதேசத்தில் சிறிதளவு வித்தியாத்திலே ஆட்சியை இழந்தது. இதர 2 மாநிலங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. 

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்ற ஒரு நிலையைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

அதில், முதல் கட்டமாக நாட்டில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும், இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 26 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close