பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விரும்புகின்றனர்: சிவசேனா

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 12:19 pm
people-want-to-create-a-non-bjp-india-shiv-sena

பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விரும்புவதை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டியிருப்பதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தெரிவித்திருப்பதாவது:  "ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். விளைப்பொருட்களுக்கு உரிய விலை கேட்ட விவசாயிகளுக்கு உரிய தீர்வு அளிக்கவில்லை. இதற்கு மக்கள் 5 மாநில தேர்தலில் பழி தீர்த்துக்கொண்டனர். இந்த தேர்தல் முடிவுகளால், பா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். பிரமர் மோடி மற்றும் அமித்ஷா காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என சூளுரைத்தனர். ஆனால் தற்போது, அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலிலேயே அவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு, விவசாயிகள் பிரச்சனை என இது எதையும் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடியோ உலக அரசியலில் ஈடுபட விமானத்தில் பறந்து கொண்டு இருந்தார். வானத்தில் பறந்து கொண்டிருந்தவர்களை, மக்கள்  தங்கள் வாக்குகள் மூலம் தரைக்கு இழுத்துள்ளனர். இன்றைக்கு, நாடு சில தொழிலதிபர்களால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்வாகிக்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் நிர்வாகம் சிதைக்கப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close