ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் கட்டாயம் இணைக்க நடவடிக்கை?

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 06:04 pm
election-commission-to-move-forward-linking-aadhar-and-voter-id

போலி வாக்காளர்களை தடுக்கவும், தேர்தல் நடைமுறையை மேம்படுத்தவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஆதார் அடையாள அட்டையை உருவாக்கிய பின்னர், அதை பல்வேறு சேவைகளுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வந்தது. மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட சேவைகளுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், அது தனிப்பட்ட உரிமைக்கு எதிரானது, என பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஆதார் இணைப்புக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சமீபத்தில், ஒரு சில சேவைகளுக்கு ஆதார் அட்டையை இணைப்பதை, கட்டாயமாக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.

முன்னதாக, 2015ம் ஆண்டு ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதை கட்டாயமாக்கவில்லை. இந்த நடவடிக்கையால் போலி வாக்காளர்களை தடுக்க முடியும் என்றும் தேர்தல் கமிஷன் சார்பில் கூறப்பட்டது. ஆனால் தனிப்பட்ட உரிமையை மீறுவதாக இது அமையும் என்பதால் கைவிடப்பட்டது. அப்போது வரை தாமாகவே முன்வந்து சுமார் 38 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைந்திருந்தனர். தற்போது இந்தியாவில் 75 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் இந்த முயற்சியை தேர்தல் கமிஷன் கையிலெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, மீண்டும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தனிநபர் அடையாள ஆணையத்திடம் கருத்துக் கேட்டிருந்தது. இதற்கான சட்ட பின்னணி இல்லாமல், முழு வீச்சில் அமல்படுத்த முடியாது என்றும், குறுகிய காலத்திற்கு இதை அமல்படுத்துவது குறித்து தனிநபர் அடையாள ஆணையம் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தற்போது இந்த விஷயம் குறித்து ஒரு நிரந்தர தீர்வை காண தேர்தல் கமிஷன் முயற்சி எடுத்து வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close