மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத்!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 05:27 am
kamal-nath-to-be-the-next-chief-minister-of-madhya-pradesh

மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக கமல்நாத்தை அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுத்துள்ளார்.

நடந்து முடிந்து 5 மாநில தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது 230 எம்எல்ஏக்கள் கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில், 114 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்றது. பெரும்பான்மைக்கு மேலும் இரண்டு இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இருந்தாலும் சுயேட்சைகளின் ஆதரவையும் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. இந்நிலையில் புதிய முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து உட்கட்சி பூசல் நடந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதில், ஜோதிராதித்ய ஸ்கிந்தியா மற்றும் கமல்நாத் இடையே கடும் போட்டி இருந்தது. இந்நிலையில், மத்தியபிரதேச முதல்வராக, கமல் நாத்தை அக்கட்சித் தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. 

"கமல் நாத்தை மத்திய பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுத்துள்ளார்" என அக்கட்சியின் ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கமல்நாத், "ஒவ்வொரு மத்தியபிரதேச வாக்காளருக்கும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம். மக்கள் உண்மைக்கு ஆதரவாக நின்றுள்ளார்" என்று கூறினார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close