ஒரே ஒரு கடனால் மல்லையா மோசடிக்காரர் இல்லை: நிதின் கட்கரி

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 05:27 am
mallya-not-fraud-because-of-one-debt-nitin-gadkari

விஜய் மல்லையாவின் இந்தியாவுக்கு நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு முறை கடனை திருப்பித் தராததற்காக அவரை மோசடிக்காரர் என்று கூற முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளிடம் சுமார் 9 கோடி அளவுக்கு கடன் வாங்கிட்டு, நாட்டைவிட்டு தப்பி லண்டனில் தஞ்சம் அடைந்தார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விஜய் மல்லையா 40 வருடங்களாக ஒழுங்காக தொழில் செய்து கடனை திருப்பி அடைத்து வந்ததாகவும், ஒருமுறை கடனை அடைக்காத காரணத்தால் அவர் மோசடிக்காரர் ஆகிவிட மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

"40 ஆண்டுகளாக மல்லையா ஒழுங்காக கடன்களை திருப்பி செலுத்தி வந்தார். விமான தொழிலிலுக்கு சென்ற பின்னர், அவருக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் அவர் உடனே திருடன் ஆகிவிடுவாரா? ஒருவர் 50 வருடங்களாக ஒழுங்காக வட்டியை கட்டி வந்தும், ஒரே ஒருமுறை கட்டாமல் போனால், உடனே அவர் செய்த எல்லாமே மோசடி ஆகிவிடுமா? அந்த பார்வை தவறானது" என ஒரு நிகழ்ச்சியில் கட்கரி பேசினார்.

"தொழில் செய்வதில் பல்வேறு ஆபத்துகள் உள்ளன. வங்கிகள் ஆகட்டும், காப்பீடு ஆகட்டும். எல்லாவற்றிலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உண்மையிலேயே பிரச்னைகள் ஏற்பட்டிருந்தால், சர்வதேச, உள்ளூர் பொருளாதாரச் சரிவு போன்றவற்றை பொருத்து இழப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நீரவ் மோடி அல்லது மல்லையா, நிதி மோசடி செய்து இருந்தால் அவர்கள் நிச்சயம் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஒரு பிரச்சினை, ஒரு கஷ்டம் என்று வருபவர்களை நாம் மோசடிக்காரர், என பட்டம் சூட்டினால், நம் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது" என கட்கரி கூறினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close