ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமா நீதிமன்றம்?- இன்று தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 09:15 am
supreme-court-to-decide-on-rafale-deal-probe-today

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து சிபிஐ விசாரணை உத்தரவு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையே, இந்த பேரம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது. ‘

mewstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close