கேரளாவில் ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு; பாஜக இன்று முழு கடையடைப்பு போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 09:16 am
state-bjp-calls-for-full-day-strike-after-man-self-immolates

கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக நேற்று சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் தீக்குளித்தார்.இதனை கண்டிக்கும் விதமாக கேரள அரசுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சபரிமலை சென்ற பெண்களை தடுத்து நிறுத்தியும் போராடினர். இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோயிலில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவும் விதிக்கப்பட்டது.

சபரிமலையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கவும், ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கவும் வலியுறுத்தி பா.ஜ.க சார்பில், கேரள தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இத விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதைக் கண்டித்து தற்போது பா.ஜ.க சார்பில் கேரளாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடையடைப்பையடுத்து கன்னியாகுமரி வழியாக கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close