முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்: மத்திய அரசு திட்டம்

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 09:52 am
100-rupee-coin-with-former-pm-atal-bihari-vajpayee-s-impression-to-be-introduced-soon

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கௌரவிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் வாஜ்பாயை  கௌரவிக்கும் விதமாக அவரது  உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டதாகவும், நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் படத்துடன் அவரது பெயர் தேவனாகிரி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட உள்ளது. அதற்கு கீழ் வாஜ்பாய் வாழ்ந்த காலத்தை குறிக்கும் வகையில் 1924 - 2018 எனவும் பொறிக்கப்பட உள்ளது. 

வழக்கமாக, நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் சிங்க முகம் அமைந்துள்ள அசோக சின்னம் பொறிக்கப்பட்டு, அதன் நடுவே 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close