ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கும் அசோக் கெலாட்?

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 03:46 pm
ashok-gehlot-to-be-rajasthan-chief-minister

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியினர் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இருப்பினும் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது. கட்சியில் மூத்த தலைவராக உள்ள அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. 

இந்நிலையில், அவர்கள் இருவரையும் நேற்று டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் இரண்டு சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் யார் என இன்று அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close