கோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 05:32 am
12-dead-after-toxin-mixed-with-temple-prasad

கர்நாடக மாநிலத்தின் சமராஜ் நகர் பகுதியில், கோவில் பிரசாதத்தில் நச்சு கலக்கப்பட்ட சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்; 82 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சமராஜ் நகர் பகுதியில் உள்ள என்ற சுலிவாடி கிராமத்தில், கிச்சு மராண்டா என்ற கோவில் உள்ளது. நேற்று இந்த கோவில் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பலருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. வயிற்று வலி, வாந்தி என பலர் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 82 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 2 கும்பல்கள் இடையே நிர்வாகப் பொறுப்புகளில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி விசாரித்தபோது பிரசாதத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் கலக்கப்பட்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் குமாரசாமி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், உத்தரவிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close