பஞ்சாபில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 01:12 pm
punjab-assembly-passes-resolution-on-33-reservation-for-women

பஞ்சாப் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இம்மாநிலத்தின் சட்டசபை கூட்டத்தொடரில், பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கொண்டு வந்துள்ளார் முதல்வர் அமரீந்தர் சிங். அதாவது பெண்களுக்கு  லோக்சபா மற்றும் சட்டசபைகளில் 33% இடஒதுக்கீடும், உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீடு அளிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நேற்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், "இந்த மசோதா கொண்டு வந்ததன் மூலம் ஆண்- பெண் பாகுபாடு ஓரளவு களையப்பட்டு, சமத்துவம் உண்டாகும். மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்" என்றார். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close