தீர்ப்பை திரும்பப் பெறுங்க!: உச்சநீதிமன்றத்தை உசுப்பேத்தும் காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 04:06 pm
rafale-case-congress-demand-sc-to-recall-their-order

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் பிழை உள்ளதாக  மத்திய அரசே கூறுவதால், இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

"ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், 25- வது பத்தியில் தவறான புரிதல் காரணமாக இலக்கணப் பிழையுடன் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிழை உடனே திருத்தப்பட வேண்டும்" என்று  மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ்  மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, "மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் மூலம், ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி,  மோசடியான தீர்ப்பை மத்திய அரசு பெற்றுள்ளது உறுதியாகிறது. தீர்ப்பில் இலக்கணப் பிழை இருப்பதாக அரசே சொல்வதால், இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, " இந்த வழக்கு விசாரணையின்போது, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கை குறித்தும், அதனை நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) ஆய்வு செய்தது என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்துள்ளது" என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close