காஷ்மீர் தலைமையகத்திற்கு பொதுமக்கள் வர வேண்டாம்: ராணுவம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 05:35 am
army-warns-against-march-to-srinagar-hq

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராட்டக்காரர்கள் 7 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை நோக்கி பேரணி நடத்த வேண்டாம் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

காஷ்மீரில் இரு தினங்களுக்கு முன் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக நாளை போராட்டம் நடத்த காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்த பிரிவினைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், ராணுவத்தின் தலைமையகத்தை நோக்கி பேரணி நடத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் ராணுவம் அறிவுறுத்துகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close