புதிய இந்தியாவை உருவாக்க இணைந்துள்ளோம்: சோனியா

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 08:38 pm
we-are-here-to-form-new-india-sonia-gandhi

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுக்கூட்டத்தில் பேசியபோது, புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்துள்ளதாக தெரிவித்தார். 

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியன் சிறை திறப்பு விழா, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. சிலையை திறந்து வைத்து, பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சோனியா, கலைஞர் கருணாநிதி, 60 ஆண்டு காலமாக அரசியலில் இருந்து, தமிழ்நாட்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் வடிவமைத்தவர் என பேசினார். கருணாநிதியின் இலக்கிய சாதனைகளை பற்றியும் சோனியா பேசினார். 

2004 முதல் 2014 அவரை காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய பங்கு வகித்த திமுக தலைவர் கருணாநிதி, கூட்டணியில் பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றை தீர்க்க வழிகாட்டியாக இருந்ததையும் சோனியா சுட்டிக் காட்டினார். 

"ஜனநாகயகத்தை பாதுகாக்கவும், புதிய இந்தியாவை உருவாக்கவும் நாம் இணைந்துள்ளோம் என்பது இந்த நாட்டுக்கு நாம் தெரிவிக்கும் செய்தியாக அமைய வேண்டும்" என்றும் கூறினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close