சர்க்கரை ஆலையில் வெடி விபத்து 6 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 05:29 am
explosion-in-sugar-factory-kills-6

கர்நாடகாவில் உள்ள பகல்கோட் பகுதியில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையில், நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர். 

பகல்கோட் பகுதியில் உள்ள குலாலி என்ற கிராமத்தில், சர்க்கரை ஆலை ஒன்று அமைந்துள்ளது. இதில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள்; 3 பேர் காயமடைந்தனர். ஆலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் "குலாலி கிராமத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும், சம்பவ இடத்தை உடனடியாக ஆய்வு செய்யவும் முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகவும் உடனடியாக இது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close