10 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு.. மோடி அரசின் மெகா திட்டம்!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 03:48 pm
jobs-for-million-students-modi-s-next-big-plan

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது அடுத்த அதிரடி நடவடிக்கையாக 10 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த திட்டத்திற்காக மனிதவள மேம்பாட்டுத் துறை, தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டுத் துறை என மூன்று துறைகளும் இணைந்து மாபெரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். 

நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை நீக்க பிரதமர் மோடியின் அரசு புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வர உள்ளது. தொழில்நுட்ப கல்வி மாணவர்களுக்கும், முதுகலை மாணவர்களுக்கும் அதிக அளவு வேலை வாய்ப்புகள் இருந்து வரும் நிலையில், இளங்கலை மாணவர்களை நோக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

6 முதல் 10 மாதங்கள் வரை நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கு அரசு ஏற்பாடு செய்யும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் இறுதி ஆண்டு முதல் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் பணி பயிற்சியில் சேரலாம். அதற்கு ஏற்ற உதவித் தொகையையும் அந்த நிறுவனங்கள் வழங்க அரசு ஏற்பாடு செய்யும். இதன்மூலம் மாணவர்களுக்கு நிறுவனங்களுடன் எளிதாக தொடர்பு ஏற்படும் என்றும், மாணவர்களின் திறனும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் உதவி பெற உள்ளனர். இதற்காக 3 துறை அதிகாரிகளும் சேர்ந்து விவாதித்து, அடுத்த சில நாட்களில் இந்த திட்டத்தை முழுமையாக்க உள்ளனர். 2019-20ம் ஆண்டில், 10 லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது மத்திய அரசு.

தேசிய அளவில் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களுக்காக 10,000 கோடி ரூபாய் நிதி உள்ள நிலையில், அதை இந்த திட்டத்திற்காக பயன்படுத்த உள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் 25% அதாவது அதிகபட்சம் ரூ.1500 வரை மத்திய அரசின் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close