ஜி.எஸ்.எல்.வி - எப்11 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 08:32 am
isro-all-set-to-launch-gsat-7a-onboard-gslv-f11-on-december-18

இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் நாளை மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ இன்று தொடங்குகிறது.

இஸ்ரோ இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்துகிறது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று  பகல் 1 மணி அளவில் தொடங்குகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close