திரும்பத் திரும்ப அதை பத்தியே கேட்காதீங்க!: கோபமடைந்த ராகுல்

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 02:21 pm
ragul-angry-in-press-meet

சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்த எனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். எனவே அதுபற்றி திரும்பத் திரும்ப கேட்காதீர்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கோபமாக கூறினார்.

ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு, "சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்த எனது நிலைப்பாட்டை நான் ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துவிட்டேன். எனவே, அதைப் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டாம்" என  ராகுல் சற்று கோபமாக கூறினார்.

மேலும்,  விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேமாட்டேன் என பிரதமர் மோடி பிடிவாதமாக உள்ளார். எனவே, விவசாய கடன் தள்ளுபடி, ரஃபேல் வழக்கின் தீர்ப்பில் உள்ள குளறுபடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பல்வேறு விவகாரங்கள் விரைவில் எழுப்பப்படும் என ராகுல் தெரிவித்தார்.


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close