அந்த கலவரங்கள் பத்தியும் விசாரிக்கணும்: சொல்கிறார் கேஜரிவால்

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 04:57 pm
should-investigate-gujarat-riot-also-kejriwal

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை போன்று, குஜராத் கலவரம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம்,  முசாஃபர் நகரில் நிகழ்ந்த கலவரங்கள் குறித்தும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், டெல்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது:
1984- இல் டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த வழக்குகளில் தொடர்புடைய பிற மூத்த தலைவரும் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.

இதேபோன்று, குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரங்கள், உத்தரப்பிரதேச மாநிலம் மூசாஃபர் நகரில் 2013-இல் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு காரணமானோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேஜரிவால் தெரிவித்தார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close