கிரிக்கெட்டுக்கு கோலி... அரசியலுக்கு மோடி...: அருண் ஜெட்லி

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 09:55 am
not-easy-to-defeat-virat-kohli-and-pm-modi-arun-jaitley

கிரிக்கெட்டில் எப்படி இந்திய அணி கேப்டன் விராட் கோலியை வீழ்த்த முடியாதோ அதே போல அரசியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த முடியாது என்று நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  புதிய அரசு மே மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்படும்.  இதேபோன்று அடுத்த வருடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது.  இதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது பேசிய அவர், "விராட் கோலி மற்றும் நரேந்திர மோடி இருவரும் தங்களது துறைகளில் ஆச்சரியப்படத்தக்க வீரர்கள்.  அவர்களை எளிதில் வீழ்த்த முடியாது.

கோலி தலைமையிலான இந்திய அணியை டி20 போட்டியில் வீழ்த்துவது மிக கடினம்.  தேர்தலை எடுத்து கொண்டால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி என்பது தோல்வி அடைந்த விஷயம்.  நிலை தன்மை அல்லது கொள்கைகள் இல்லாத அல்லது தலைவரை பற்றிய நிச்சயம் இல்லாத கூட்டணியினரை தேர்வு செய்து, தற்கொலை செய்து கொள்ள எந்த நாடும் முன்வராது" என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close