மேகதாது விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 01:33 pm
admk-mps-protest-at-parliament-against-mekedatu-dam

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தமிழகத்தில் இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதோடு, சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தின. 

அதன்படி, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடக்க நாள் முதலே அதிமுக எம்.பிக்கள் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு அதிமுக எம்.பிக்கள் மேகதாது அணைக்கு எதிராக கோஷமிட்டு, கையில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close