ஏறுமுகத்தில் பங்குச்சந்தை - தங்கம் விலை குறைவு

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 11:41 am
share-market-raising-continuously-for-seventh-day-gold-price-decreased

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7ம் நாளாக ஏறுமுகத்தில் காணப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து பங்குச்சந்தைகளின் மதிப்பு மேலும் குறையக் கூடும் என்று முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருந்தார். ஆனால், அவரது கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் பங்குச்சந்தை மதிப்பு உயர்ந்து வருகிறது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 94.73 உயர்ந்து 36,441.81-ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.75 புள்ளிகள் உயர்ந்து 10,943.45 புள்ளிகளாக காணப்பட்டது. 5 மாநில தேர்தல் குறித்து வாக்குக்கணிப்புகள் வெளியான போது பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் சகஜ நிலைக்கு திரும்பி மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில வாரத்தில் கிராம் ஒன்றுக்கு மீண்டும் 3000 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் சற்று விலை குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.2963 என்ற விலையிலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.39.80 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. ஒரு டாலருக்கு நிகரான இன்றைய மதிப்பு ரூ.71.55ஆக உள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close