கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அமைச்சர்கள் மீது வெங்காயத்தை வீசுங்கள்: விவசாயிகள் மத்தியில் ராஜ்தாக்கரே பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 11:38 am
throw-onions-at-ministers-if-they-don-t-listen-raj-thackeray-to-farmers

உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அமைச்சர்கள் மீது வெங்காயத்தை வீசுங்கள் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் வெங்காய உற்பத்தி மற்றும் நாடு முழுவதுக்குமான அதன் விற்பனைக்கான சந்தையாக திகழ்ந்து வருகிறது. நாடெங்கிலும் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து அவர்களுக்குத் தேவையான வெங்காயத்தை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள பல்வேறு சந்தைகளில் விளைபொருளான வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் ஈடுபொருளான வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெங்காயம் அதிகம் விளையும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவரான ராஜ் தாக்கரே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கல்வான் பகுதியில் வெங்காய விவசாயிகள் மத்தியில் அவர் பேசுகையில், "உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அமைச்சர்கள் மீது வெங்காயத்தை வீசி தாக்குங்கள்" என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close