கோவாவை சுற்றிப்பார்க்க வெறும் 400 ரூபாய் - இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 01:00 pm

irctc-is-offering-goa-tour-at-just-rs-400

வெறும் 400 ரூபாயில் கோவா முழுவதையும் சுற்றிப்பார்க்கும் ஓர் புது சலுகையை இந்திய ரயில்வே சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது. 

விரைவில் ஆங்கிலப் புத்தாண்டு தினம் வர இருப்பதையொட்டி, மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற  பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே சுற்றுலா(Indian Railway Tourism), இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத்தங்களுக்கான சலுகைகளை அறிமுகப்படுத்தும். 

அதன்படி கோவாவை சுற்றிப்பார்க்க  ஒருவருக்கு ரூ.400 என அறிவித்துள்ளது. டூருக்கு பெயர் போன கோவா நகருக்குச் சென்று வர வேண்டும் என்பது பெரும்பாலான அனைத்து இளம் வயதினருக்கும் இருக்கக்கூடிய ஓர் ஆசை. சிலர், அங்கு அடிக்கடி சென்று வருவதும் உண்டு. 

இந்நிலையில், கோவா செல்ல திட்டமிடுபவர்களுக்கு ஒரு சூப்பர் டூர் ப்ளான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'HOP ON HOP OFF GOA BY BUS' பேருந்து சலுகையின் மூலம் தனி நபர் ஒருவர் ரூ.400 செலவில் கோவாவை சுற்றிப் பார்கலாம். இந்த திட்டத்தின்படி, தனி நபர் ஒருவர் வடக்கு கோவா அல்லது தெற்கு கோவாவை ஒருநாள் சுற்றிப்பார்க்க ரூ.400, வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா ஆகிய இரண்டையும் சேர்த்து இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.700 எனவும் அறிவிக்கப்பட்டள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றிக்காண்பிக்கப்படும். இந்த சலுகை பெற, தங்களது பயணத்திற்கு 4 நாள் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.