கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்ட மடாதிபதி!

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 04:34 am
karnataka-temple-priest-confesses-to-poisoning-devotees

கர்நாடக கோவிலில், பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேர் உயிரிழந்த நிலையில், கோவில் மடாதிபதியும் நிர்வாகிகள் மூன்று பேரும் பிரசாதத்தில் பூச்சிமருந்து கலந்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கர்நாடகாவில் உள்ள சுல்வாடி கிராமத்திலுள்ள மாரம்மா கோவிலில், இரண்டு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்துக்கான சர்ச்சை காரணமாக, பிரசாதத்தில் ஒரு தரப்பு விஷம் கலந்ததாக தெரிகிறது. அதை உண்ட எட்டு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 90 பேரில், 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவில் மடாதிபதி மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரசாதத்தில் விஷம் கலந்ததாக தெரியவந்தது. கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள ஏற்பட்ட போட்டியிலேயே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது. மடாதிபதி மற்றும் நிர்வாகிகள் சிலரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அந்த கோவிலின் மடாதிபதி மகாதேவ சுவாமி, பிரசாதத்தில் விஷம் கலந்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியின் எஸ்.பி மீனா பேசியபோது, "52 வயதான கோவில் மடாதிபதி மகாதேவ சாமி மற்றும் மூன்று நிர்வாகிகள், உணவில் பூச்சி மருந்து கலந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்" என தெரிவித்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close