ரஃபேல் விவகாரத்தில் பிரேந்தர் சிங் தனோவா தலையிட வேண்டாம்: ப.சிதம்பரம்

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 12:46 pm
please-stay-out-of-rafale-debate-says-p-chidambaram-to-forces

ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் விமானப்படை தலைமை தளபதி பிரேந்தர் சிங் தனோவா தலையிடாமல், தயவுசெய்து மெளனம் காக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  கூறியுள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளதாக, விமானப் படை தலைமை தளபதி பிரேந்தர் சிங் தனோவா புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தார்.

உடனே அவரை "பொய்யர்" என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது:

இந்திய விமானப் படைக்கு மொத்தம் 126 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யதான்  காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தற்போது பாஜக அரசு 36 விமானங்களை மட்டுமே கொள்முதல் செய்கிறது.

இந்த எண்ணிக்கை குறைப்பு ஏன் என்பது குறித்துதான் விமானப் படை தலைமைத் தளபதி கேள்வியெழுப்ப வேண்டும் அல்லது இந்த விவகாரத்தில் விமானப் படை அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் தயவுசெய்து மெளனம் காக்க வேண்டும்.

மாறாக மத்திய அரசுக்கு சாதகமாக அவர்கள் கருத்துகள் தெரிவிப்பது சரியல்ல. நாங்கள் யாரும் விமானப் படை தளபதி மீது குற்றம்சாட்டவில்லை என சிதம்பரம் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close