விடுமுறை நாட்களில் விண்ணைத் தாண்டும் விமானக் கட்டணம்: நாடாளுமன்ற நிலைக் குழு கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 04:59 pm
parliamentary-committee-ire-about-flight-fares

பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் விமான பயணக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வருவதற்கு நாடாளுமன்ற நிலைக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, விமானப் பயணக் கட்டணம் தொடர்பான தனது ஆய்வறிக்கையை அண்மையில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதில், "பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் விமானங்களின் பயணக் கட்டணம், முன்பதிவு திட்டங்களில் பெறப்படும் கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. சில விமான நிறுவனங்கள் 10 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன" என வருத்தம் தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கை தொடர்பான தமது பதிலை மத்திய அரசு மாநிலங்களவை வெள்ளிக்கிழமை அளித்தது. அதில், "சர்வதேச பயணக் கட்டண நிலவரம், விமானங்களின் தேவை, பருவநிலை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டுதான் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.

மேலும்,  90, 60 மற்றும் 15 நாள்களுக்கு முன்பாக பயணச்சீட்டை பதிவு செய்யும் வசதியும் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அளிக்கதான் செய்கின்றன. இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலைக்குழு, விமான பயணக் கட்டணங்களை முறைப்படுத்த அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close