காஷ்மீர் துப்பாக்கி சண்டை: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 10:50 am
kashmir-gun-fire-6-terrorists-shot-dead

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழக்கின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் என்ற இடத்தில் இன்று காலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கர ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close