நாட்டிலேயே நீளமான ரயில் பாலம் - வாஜ்பாய் அடிக்கல் நாட்டியதை மோடி திறந்து வைக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 11:09 am
gujarat-bjp-candiatate-leading-in-bye-polls

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரமப்புத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம் 16 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் நிறைவுக்கு வந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் தின்சுகியா பகுதியில் இருந்து அருணாசலப் பிரதேச மாநிலம், நாஹர்லகூன் என்ற பகுதியை, பிரமப்புத்திரா நதியின் வழியாக இணைக்கும் இந்தப் பாலம் 4.94 கி.மீ. நீளம் கொண்டதாகும். பாலம் இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கீழ் அடுக்கில் இருவழி ரயில் பாதைகளும், மேல் அடுக்கில் 3 வழிச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, தின்சுகியாவில் இருந்து நாஹர்லகூனுக்கு ரயிலில் செல்வதற்கான பயணத்தில் 10 மணி நேரம் மிச்சப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாஜ்பாய் 2002இல் அடிக்கல் நாட்டினாலும் இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சிக்காலம் நிறைவுபெற்றுவிட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி வேகமெடுக்கவில்லை. இந்தச் சூழலில், மொத்தம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாலத்தின் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவு செய்யப்பட்டு தற்போது திறக்கப்படவுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.5,920 கோடியாகும். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close