ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ஒரு ஊழல்வாதி: சு.சுவாமி குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 01:48 pm
rbi-governor-involved-in-corruption-alleges-subramanian-swamy

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி, அவரை கவர்னராக மத்திய அரசு நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது பாஜகவினரிடையே சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், "ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி. முன்னதாக நிதி அமைச்சகத்தில் இருந்து அவரை பதவி நீக்கம் செய்ய வைத்தேன். அவரை ஊழல்வாதி என்றே கூற முடியும். அப்படிப்பட்ட ஒருவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக மத்திய அரசு நியமித்தது ஆச்சரியத்தை அளிக்கிறது" என்று தெரிவித்தார். 

தொடர்ந்து, "ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு பெங்களூர் ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் தான் தகுதியானவர். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்" என்றார். 

மேலும், "பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை எதுவும் வீசவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவே வெற்றி பெறும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவரால் எம்.பி.யாக கூட முடியாது. பின் எப்படி பிரதமர் ஆக முடியும்" என்று பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close