டெல்லியில் அதிகளவு காற்று மாசு; மக்கள் கடும் அவதி

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 11:31 am
delhi-receives-high-level-in-air-pollution

வடமாநிலங்களில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்து.

குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு அளவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. காற்று மாசு அளவு இவ்வாறு அதிகளவு பதிவாவது, இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும். நாட்டின் தலைநகரை, கடுமையான குளிரும், காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகின்றன. ஏற்கனவே, காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி வாசிகளுக்கு, கடுங்குளிர் பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close