தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது: நிதின் கட்கரி

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 11:36 am
megathadhu-issue-kadhgaris-statement

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள இந்த அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பல ஆண்டுகளாக பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இது தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close