மக்களவைத் தேர்தல்: ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனைக் கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 10:56 am
dmk-meeting-at-chennai-anna-arivalayam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, 2019 மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

அந்த வகையில் இன்று,  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் வேட்பாளர்கள் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close