குஜராத்- பேருந்து விபத்தில் 10 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 02:04 pm
gujarat-bus-accident-10-students-dead

குஜராத் மாநிலத்தில் மகால்-பரிதாபாத் சாலையில் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில், 8 மாணவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 


குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் அம்ரோலி என்ற இடத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்கள். அங்கு படித்து வரும் மாணவர்கள் உள்பட 80 பேர் ஒரு பேருந்தில் டாங் மாவட்டத்தில் உள்ள சபரி அணைக்கட்டுக்கு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் பேருந்தில் சூரத்துக்கு திரும்பினர். அவர்களது பேருந்து மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 மாணவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 24 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close