நடுத்தர மக்கள் குறித்த கேள்விக்கு மோடி மழுப்பலான பதில் ஏன்?: ராகுல்

  Newstm Desk   | Last Modified : 25 Dec, 2018 05:01 pm
why-did-modi-dodge-question-about-middle-class-rahul-asks

பாஜகவினருடனான கலந்துரையாடலின்போது, கட்சி நிர்வாகி ஒருவர் நடுத்த வர்க்கத்தினர் குறித்து கேட்ட கேள்விக்கு, பிரதமர் மோடி மழுப்பலாக பதிலளித்தது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாஜக நிர்வாகிளை பிரதமர் மோடி, விடியோ கான்ஃபரன்சிங் மூலம அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது நிர்மல் குமார் ஜெயின் என்ற கட்சி நிர்வாகி, "நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பலவழிகளில் வரிகளை வசூலிப்பதில் மத்திய  அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், அவர்களின் வருமான வரி விகிதங்களை குறைக்கவோ, அவர்களுக்கு வங்கிக் கடன்கள்  எளிதில் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?" என கேள்வியெழுப்பினார்.

அதற்கு, "நீங்களொரு வணிகர். அதனால் இப்படிதான் பேசுவீர்கள். ஆனால், மத்திய அரசு பொதுமக்களுக்காக பல நல்ல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி கொண்டுதான் உள்ளது" என மோடி பதிலளித்தார்.

மேற்கொண்டு நிர்மல் குமார் ஏதோ கேட்க முயன்றபோது, பிரதமர் ,"வணக்கம் புதுச்சேரி!" என்றபடி, அவரது கேள்வியை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை  சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம் புதுச்சேரி! என்பதுதான், நடுத்தர வர்க்கத்தினர் குறித்த கேள்விக்கு பிரதமரின் பதில்.

 பத்திரிகையாளர்களை சந்திப்பதை மறந்தே போய்விட்ட மோடி, கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பில்கூட எல்லா கேள்விகளும்  பாஜக சாதகமாகவே கேட்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். இதேபோல், கேள்விக்கு உரிய பதிலையும் அவர் அளிக்க வேண்டும்" என்ற ராகுல் தெரிவித்துள்ளார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close