சம்பளம் கொடுக்க வழியில்ல - வரி ஏய்ப்பில் சிக்கிய ‘அம்னெஸ்டி இந்தியா’ கதறல்

  Newstm Desk   | Last Modified : 26 Dec, 2018 12:51 pm
there-is-no-money-for-providing-salary-amnesty-india

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள ‘அம்னெஸ்டி இந்தியா’ தன்னார்வ தொண்டு நிறுவனம் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாமல் நிற்பதாக கவலை(!) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவிலான இந்த இயக்கம் மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் குரல் எழுப்பி வரும் அமைப்பாகும்.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல, அந்தப் பணத்துக்கு உரிய முறையில் கணக்கு காண்பித்து வரி கட்டுவதில்லை. அம்னெஸ்டி இந்தியா அமைப்பும் அதுபோல வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, அம்னெஸ்டி இந்தியாவின் பணப் பர்வர்த்தனை நடவடிக்கைகளை கடந்த 4 ஆண்டுகளாக அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அதிரடி நடவடிக்கையாக பெங்களூருவில் உள்ள அம்னெஸ்டி இந்தியாவின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் அண்மையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வரிஏய்ப்பு புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு அம்னெஸ்டி இந்தியாவுக்கு அறிவுறுத்தப்பட்டது. அது அந்த தொண்டு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அவர்களது வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

இத்தகைய சூழலில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் ஆலோசகர்களை பணியில் இருந்து நிறுத்தியுள்ளதாக அம்னெஸ்டி இந்தியா தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தங்களின் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பிரச்னைகள் சரியானதும் பணியாளர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அம்னெஸ்டி இந்தியா கூறியுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close