நாயே மண்டையை உடைப்பேன் - நிருபருக்கு சிறுபான்மையின தலைவர் மிரட்டல்...!

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Dec, 2018 03:08 pm
united-democratic-front-leader-threathens-journalist

’நாயே உன் மண்டையை உடைத்து விடுவேன்’ என்று தன்னை பேட்டி எடுக்க வந்த நிருபரை தகாத வார்த்தைகளால் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மவுலானா பத்ருதின் அஜ்மல் மிரட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் நஸ்ருதீன்ஷா இந்தியாவில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு, மனிதர்களுக்கு இல்லை என்றும் இந்தியாவில் வாழ அச்சமாக உள்ளது என்றும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இவரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தனியார் செய்தி நிறுவனத்தின் நிருபர் ஒருவர் சமீபத்தில் பத்ருதீன் அஜ்மலை பேட்டி எடுக்க சென்றிருந்தார். அப்போது நிருபர் உங்கள் ஆதரவு பாஜகவுக்கா அல்லது காங்கிரசுக்கா என்ற கேள்வியை எழுப்பினார். 

இதில் ஆத்திரமடைந்த அஜ்மல் அந்நிருபரை ’நாயே உன் மண்டையை உடைத்து விடுவேன்’. உன்னால் முடிந்தால் என் மீது புகார் கொடு.  இந்த கேள்வியை கேட்க நீ பாஜகவிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினாய்' என்றும் என் பின்னால் ஆயிரக்கணக்கானேரர் உள்ளனர். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டால் என்னாகும் என்று உனக்கு தெரியுமா? என மிரட்டியுள்ளார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அசாமில் நடந்த ஆசாத் மைதானத்தில் நடந்த வன்முறை சம்பவம் மற்றும் அமர் ஜவான் ஜோதி இடிப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close