பெண்கள் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேறும்? மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கேள்வி !

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 05:43 pm
woman-reservation-bill-punjab-cm-ask-question-to-pm-modi

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை எப்போது நிறைவேற்றுவீ்ர்கள் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பிரதமர்  மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு கேட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு தேசிய கட்சிகள் மற்றும் திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 15  மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிஜு ஜனதா தளக் கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, பல்வேறு மாநில முதல்வர்களுக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தீர்மானம் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும்  மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை எப்போது நிறைவேற்றுவீர்கள் என, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பிரதமர்  மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close