ராணுவ வீரர்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது: மோடி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 07:03 pm
soldiers-mislead-by-congress-modi

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, நம் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

ஹிமாசல பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அங்கு வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. தர்மசாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் நம் ராணுவ வீரர்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு 500 கோடி ரூபாய் தான் நிதி ஒதுக்கியது. ஆனால், ராணுவ வீரர்களின் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கியதாக அக்கட்சி பொய் கூறி, அவர்களை தவறாக வழிநடத்துகிறது.

ஆனால், உண்மையில் மத்தியி்ல் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், ராணுவத்தினரின் ஓய்வூதியத்துக்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதேபோன்று, தேர்தல்களில் எங்களை வெற்றிபெற செய்தால்தான்  விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகளையும் காங்கிரஸ் தவறாக நடத்தி கொண்டிருக்கிறது என்று  மோடி பேசினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close