மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 7 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 09:36 am
fire-on-the-14th-floor-of-sargam-society-near-ganesh-garden-in-tilak-nagar-mumbai

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 

மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பி- பிரிவு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்து மற்ற தளங்களுக்கும் பரவியது.

தகவல் அறிந்ததும் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுஒருபுறமிருக்க மீட்பு பணியும் நடைபெற்றது. தீப்பிடித்த தளத்தில் இருந்து முதியவர்கள் உள்ளிட்ட சிலர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். 

 தீ அணைக்கும் பணியின் போது, தீ அணைப்பு வீரர் ஒருவரும் காயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close