பச்சோந்திகள் கூட உங்களை பார்த்து ஆச்சரியப்படும்: காங்கிரஸ் மீது பா.ஜ.க கடும் தாக்கு!

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 12:08 pm
even-a-chameleon-must-be-applauding-your-ability-to-change-colours-bjp

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியை பச்சோந்தியுடன் ஒப்பிட்டு பாரதிய ஜனதா கட்சி ட்வீட் செய்துள்ளது. 

இஸ்லாமியர்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்து வந்த ஆண்கள் மூன்று முறை தலாக் எனக் கூறி அவரது மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஆறு மணிக்குப் பிறகு நிறைவேறியது. நாடாளுமன்றத்தின் இதுகுறித்து விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. 

 

இதனை குறிப்பிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "ராகுல் காந்தி நீங்கள் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுனீர்கள். இப்போது முத்தலாக்கிற்கு உங்கள் தற்போது முத்தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பச்சோந்தி கூட உங்களை கண்டு ஆச்சர்யப்படும். பெண்கள் முன்னேற்றம் காந்தி குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானதா என்ன?" என ட்வீட் செய்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close