மூத்த திருநங்கைகளுக்கு ரயில் பயணத்தில் கட்டண சலுகை

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Dec, 2018 12:54 pm
concession-in-ticket-fares-for-transgender-railway

மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் உள்ளிட்டவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது 40 சதவீதம் கட்டணச் சலுகை வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த கட்டணச் சலுகை புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது. தற்போதுள்ள விதிமுறையின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 58 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மட்டும் ரயில் பயணத்தின்போது கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

ரயில்வே முன்பதிவு படிவத்தில் திருநங்கைகளுக்கான  இடம் ஒதுக்கப்பட்டபோதிலும், அவர்களுக்கான கட்டணச் சலுகை அளிக்கப்படாமல் இருந்து வந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் சுனில் உதாசி, மூன்றாம் பாலினத்தவருக்கான இடம் ரயில்வே முன்பதிவு படிவத்தில் அளிக்கப்பட்டாலும் அவர்களுக்குரிய கட்டணச் சலுகை அளிக்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரயில் பயணத்தில் 40 சதவீதம் கட்டணச் சலுகை வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது எனத் தெரிவித்தார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close