காஷ்மீரில் இன்றும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 11:24 am
kashmir-four-terrorists-killed-in-encounter

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புள்வாமா மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலையில் சுட்டுக் கொன்றனர். நேற்று இதே மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

புள்வாமா மாவட்டத்தில் உள்ள ஹஜின் பையின் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு இன்று காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த சமயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். இதற்குப் பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டதும் மோதல் ஏற்பட்டது.

இந்தச் சண்டையின் இறுதியில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close