6,000 வங்கி அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை!

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 02:42 pm
bad-loan-issue-action-taken-against-over-6-000-bank-officials-arun-jaitley

வாரா கடன் விவகாரம் தொடர்பாக 6,000-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மீது துறைரீதியான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 19 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ. 21,388 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6,861 கோடியாக இருந்தது.

வங்கிகள் நஷ்டத்தை சந்திப்பதற்கு அவற்றின் வாரா கடன் முக்கிய காரணமாக உள்ளது. வங்கி அதிகாரிகளின் கவனக் குறைவு, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக தகுதியற்ற நிறுவனங்களுக்கு கடன் தருவது  ன்ற நடவடிக்கைகளால் வங்கிகளின் வாரா கடன் அதிகரித்து வருவதாக மத்திய அரசுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, " வாரா கடனுக்கு காரணமான பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த 6000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது பணிநீக்கம், கட்டாய ஓய்வு, பதவியிறக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


 வாரா கடன் தொகையை பொறுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சிபிஐ மற்றும் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது" என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close