அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சர்ச்சை; மோடி செய்யும் சதி - காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 07:24 pm
congress-fires-at-modi-for-agustawestland-ed-reveal

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விசாரணையில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், 'திருமதி காந்தி' என்ற பெயரை குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்ததிருப்பது பிரதமர் மோடி செய்யும் சதி என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கின் விசாரணையில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது. அவரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கோரியது அமலாக்கத்துறை. அப்போது, விசாரணையின் போது, மைக்கேல் தங்களிடம் 'திருமதி காந்தி' என்ற பெயரை கூறியதாக தெரிவித்துள்ளது. அதுகுறித்து தற்போது மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியது.

இது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை குறிப்பதாக பரவலாக கருதப்படுகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறையை பயன்படுத்தி காந்தி குடும்பத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க பிரதமர் மோடி செய்யும் சதி என காங்கிரஸ் கட்சியின் ஆர்.பி.என் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய போது, "2019 தேர்தல் வெகு தொலைவில் இல்லை. பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு விவகாரத்தையும் எடுத்துக் கொண்டு, வெட்கமில்லாமல் மத்திய துறைகளை துஷ்பிரயோகம் செய்து, காந்தி குடும்பத்தின் பெயரை களங்கப்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னதாகவே காந்தி குடும்பத்தை பற்றி பொய் வாக்குமூலம் கொடுக்க மைக்கேல் வலியுறுத்தப்பட்டது எல்லாருக்கும் தெரியும்" எனக் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close