கண்மூடித்தனமாக காங்கிரஸ் கொள்ளையடித்துள்ளது: அமைச்சர் ஜவடேகர்

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 05:29 am
everything-points-towards-one-family-javadekar-on-agustawestland-scam

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் வாக்குமூலம், காங்கிரஸ் கட்சி கண்மூடித்தனமாக கொள்ளையடித்திருப்பதை காட்டுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், கூடுதல் கால அவகாசம் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை அணுகினர். அப்போது, விசாரணையில் 'திருமதி காந்தி' என்ற பெயரையும் 'ஆர் என்ற பெரிய புள்ளி' 'ஒரு கட்சியின் தலைவர்', என இருவரை குறிப்பிட்டு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் மைக்கேலின் வாக்குமூலம் குறிப்பிடுவதாக பரவலாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியவை அனைத்தும் ஒரே ஒரு குடும்பத்தை தான் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது "நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியதை பார்த்து நாடே அதிர்ந்து போயுள்ளது. ஹெலிகாப்டர் ஊழலில் மைக்கேல், காங்கிரஸ் தலைவர் 'திருமதி காந்தி' என குறிப்பிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.

மேலும், "இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவர், இத்தாலி நாட்டை சேர்ந்த பெண்ணின் மகன் என்றும் 'ஆர்', 'கட்சியின் தலைவர்', 'பெரிய புள்ளி' என்றும் கூறியுள்ளார்" என்றார் ஜவடேகர். இதை வைத்து பார்த்தால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கண்மூடித்தனமாக கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close