ஸ்ரீநகர் மசூதியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி; இளைஞர்கள் அட்டூழியம்

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 11:53 am
youngsters-carrying-isis-flags-create-ruckus-at-jamia-mosque

காஷ்மீரில் உள்ள ஒரு மசூதியில் இளைஞர்கள் சிலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஜூம்மா மசூதியில் நேற்று சிறப்புத் தொழுகை நடந்தது. தொழுகைக்கு பின்னர், பொதுமக்கள் சென்ற பிறகு, அங்கு வந்த இளைஞர்கள் சிலர் மசூதிக்குள் புகுந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியை காட்டினர். இதனையடுத்து அங்கிருந்த பொது மக்கள், அந்த இளைஞர்களை விரட்டியடித்தனர். இதை அங்கிருந்தவர் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மசூதி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இளைஞர்கள் இதனை திட்டமிட்டு தான் செய்துள்ளனர் என்றும் இந்த சம்பவம் வருந்தத்தக்கது என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close