கும்பமேளா ஜனவரி 15 -இல் தொடக்கம்: மோடி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 12:10 pm
kumbh-mela-will-begins-at-january-15-pm-modi

உலக பிரசித்த பெற்ற விழாவான கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் வரும் ஜனவரி 15 - ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் மான் -கீ- பாத் நிகழ்ச்சியில்  இன்று மேலும் பேசியது:

கும்பமேளாவை பாரம்பரிய, கலாசார மற்றும் மனிதநேய சிறப்புமிக்க திருவிழாவாக யுனஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இத்தகைய பெருமைமிக்க கும்பமேளா இந்த ஆண்டும், உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் வெகுசிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

உலகின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கும் பக்தி பரவசமிக்க இந்த பிரம்மாண்ட திருவிழா, வரும் 15 -ஆம் தேதி தொடங்குகிறது என  பிரதமர் தெரிவித்தார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில், கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று புனித நீராடுவது கும்பமேளாவின் முக்கிய நிகழ்வாகும். ஜனவரி 15 -ஆம் தேதி தொடங்கி மார்ச் 4 -ஆம் தேதி வரை இவ்விழா அங்கு நடைபெறவுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close