2019 -லும் பாஜக அரசின் சாதனைப் பயணம் தொடரும்: மோடி

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 02:39 pm
central-government-achievements-will-continue-on-2019-also-modi

2018 ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகள் ஒவ்வொரு குடிமகனையும் பெருமை அடைய செய்திருக்கும் என்றும், வளர்ச்சியை நோக்கிய அரசின் சாதனைப் பயணம் 2019 ஆம் ஆண்டிலும் தொடரும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று அகில இந்திய வானொலியில் மான் -கீ-பாத் (மனதின் வார்த்தைகள்) எனும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த ஆண்டின் கடைசி மற்றும் இந்த நிகழ்ச்சியில் அவரது 51 -வது உரையாக அமைந்த இன்றைய வானொலி உரையாடலில் பிரதமர்  மோடி பேசியது:

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியது, ஒற்றுமையின் அடையாளமாக உலகிலேயே மிக உயரமான வல்லபாய் படேலின் சிலையை நிறுவியது, நாட்டின் எல்லா கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்தது, ஐ.நா.வின் சுற்றுசூழல் விருதை இந்தியா பெற்றது என 2018 -ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு நிகழ்த்தியுள்ள சாதனைகள் ஏராளம்.

நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்பினால்தான் இந்த சாதனைகள் சாத்தியமானது. மத்திய அரசின் சாதனைகள் ஒவ்வொரு குடிமகனையும் மகிழ்ச்சி, பெருமை அடைய செய்திருக்கும் என நம்புகிறேன்.

தேசத்தை மேன்மேலும் வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்லும் மத்திய அரசின்  சாதனைப் பயணம் 2019 -ஆம் ஆண்டிலும் தொடரும் என மோடி கூறினார்.

வரும் மே மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

பாராட்டு: மோடி தமது உரையின்போது,  புனேவைச் சேர்ந்த சைக்கிள் வீராங்கனை வேதங்கி குல்கர்னி, குத்துசண்டை வீராங்கனை ரஜினி ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.

அதேபோன்று சமீபத்தில் மறைந்த 5 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்படும் சென்னை மருத்துவர் ஜெயச்சந்திரன், கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் நரசிம்மாவையும் நினைவு கூர்ந்து பாராட்டி பேசினார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close